கோவை: கோவை போளுவாம்பட்டி அருகே காட்டுயானை மிதித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போளுவாம்பட்டி வனச்சரகம் முள்ளங்காடு சுற்று நிலப்பிரிவு சர்க்கார்போரத்தி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதம்மாள் (70), இவர் நேற்று தனது வீட்டில் இருந்து சிறுவாணி மெயின் ரோடு அருகே கிழக்குப் பகுதி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு திடீரென்று காட்டு யானை ஒன்று வந்தது. இதை பார்த்ததும் மருதம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அவர் காட்டு யானையிடம் இருந்து தப்ப முயன்றார். ஆனால், அதற்குள் அந்த காட்டு யானை அவரைத் துரத்திச் சென்று துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே வீசி போட்டு மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்த தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் ஆரோக்கியசாமி, வனவர் ரஞ்சித், வனக் காப்பாளர்கள் மாரிமுத்து, திலக்சரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சர்க்கார்போரத்திபதி மலைவாழ் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.