மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண தர்ணா போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிரில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். 



போராட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் அதில், ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காலநிலை பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கவும், மருத்துவ வசதிகளில் குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவி திட்டத்தில் சேர மீண்டும் அவகாசம் வழங்கவும். சொந்த பணி விடுவிப்பு - நிலவைத் தொகையில் 15 ஆயிரம் பேர்களுக்கு பணப்பயன்கள் கிடைக்கவில்லை அவர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்படவும், காலி பணியிடங்களை நிரப்பவும், ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை சட்டம் 1972ன் படி, பணிக்கொடையினை கணக்கிட்டு நிலுவைத்தொகையினை வழங்கவும், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாளுக்கு பிறகு அவர்களது குடும்பத்தில் வருமானம் ஈட்ட முடியாத மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம்  வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இதில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் ராமச்சந்திரன், உதவித் தலைவர்கள் நாச்சிமுத்து, சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் 150 மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...