கோவையில் ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக புகார்!

கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


கோவை: ஜாதி ரீதியாக இழிவு செய்த நபர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கைது செய்ய காவல்துறை காலதாமதம் செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை அடுத்து சூலூர் தாலுக்கா மலையாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கியப்பன் என்பவரிடம் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.ஆர்.பழனிசாமிக்கு டிராக்டர் ஓட்ட உரிமையாளர் கூறியதாகவும் அதற்கான வாடகையை அவரிடம் பெறுமாறு கூறி உள்ளார். மூன்று வாரங்கள் வாகனம் ஓட்டிய நிலையில், அதற்கான பணத்தை தருமாறு பழனிசாமியிடம் தமிழ்செல்வன் கேட்டு உள்ளார்.

இதல் ஆத்திரமடைந்த பழனிசாமி ஜாதி ரீதியாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 30ம் தேதி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்குபதிவு செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை பழனிசாமியை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், தன்னை தாக்கியவர்கள் வழக்கை வாபஸ் பெற நிர்ப்பந்தம் செய்வதுடன் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தமிழ்செல்வன் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...