கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 ஜவுளி கடைகளுக்கு 3 லட்சம் அபராதம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கணபதி சில்க்ஸ் கடைக்கு ரூ. 2 லட்சம் மற்றும் சரவணா ஸ்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கணபதி சில்க்ஸ் கடைக்கு ரூ. 2 லட்சம் மற்றும் சரவணா ஸ்டோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை டவுன்ஹால், ஒப்பனக்கார வீதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் தற்போது கடைவீதிகளில் ஷாப்பிங் செய்ய குவிந்து வருகின்றனர்.

இதனால், மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்கின்றனர்.



மேலும், கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் கூட்டமாக இருக்கும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர். 



அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத 2 தனியார் ஜவுளிக்கடைகளுக்கு 3 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் கடைவீதிகளில் அதிகளவில் கூடுகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. இதனை தடுக்க, கடைகளில் அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும், விதிமுறைகளை மீறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படும். எனவே, வணிகர்கள் அரசு கூறும் அறிவுறுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...