திருப்பூர்: தமிழ்நாடு தின விழாவான இன்று, திருப்பூரில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாட்டு கொடியுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இன்று, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், தமிழ் நாடு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, திருப்பூரில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ரயில் நிலையம் முன்புறமாக, தமிழ்நாடு கொடி ஏற்றபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு, காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ் நாட்டு கொடியுடன் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.

அப்போது, தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.