கோவையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தவேல். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 14 வயது மகன் அருண் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

செல்போனில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் எந்த நேரமும் விளையாடியபடியே இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் சிறுவன் கேட்காததை அடுத்து, பப்ஜி விளையாட்டிலிருந்து மீட்க, அவரது பெற்றோர் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள நண்பரின் தோட்டத்தில் தங்கி சிறுவனுக்கு சூலூரில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் அருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...