குன்னூர் பழைய அருவங்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது செய்து சிறையில் அடைப்பு!

நீலகிரி: குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த உபதலை ஆலோரை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நீலகிரி: குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த உபதலை ஆலோரை கிராமப் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவ, மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் குன்னூரில் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கடந்த வாரம் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்திய சோதனையில் வீடுகளிலேயே கஞ்சா செடிகள் வளர்த்து வந்த சித்தி விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த அன்புமணி, சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இதே பகுதியில் கஞ்சா வைத்திருந்த வினோத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காவல் துறையினரின் தொடர் தேடுதலில் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள தோட்டத்தில் கெஞ்சா செடி பயிரிட்டது தொடர்பாக உபதலை ஆலோரை கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் (42) என்பவரை அருவங்காடு காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்ட காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...