குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டு எருமை தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி!

நீலகிரி: குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டு எருமை தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: குன்னூர் அருகே அட்டடி பகுதியில் காட்டு எருமை தாக்கி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீப காலமாக காட்டு எருமை நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலேயே உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே அட்டடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார்(26). இவர் வீட்டுக்கு வெளியே சென்ற போது, புதர் மறைவில் நின்றிருந்த காட்டு எருமை இவரை நோக்கி பாய்ந்து வயிற்றுப் பகுதியில் குத்தி தூக்கி வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

காட்டு எருமைகள் அடிக்கடி பொதுமக்களை தாக்கி உயிரிழப்புகள், படுகாயங்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் காட்டு எருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் மற்றும் குன்னூர் கோட்ட வன அலுவலர் சசிக்குமார் உயிரிழந்த ரஞ்சித் குமார் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 4 லட்சம் ரூபாயில் முன் பணமாக ரூ.50 ஆயிரத்தினை அவரது மனைவி நித்தியாவிடம் வழங்கினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...