கோவை: கோவை தடாகம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் கேரள பதிவு எண் கொன்ட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் பால முரளி சுந்தரம் தனிப்படை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவராஜ், ஆறுமுகம் ஆகியோர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, விற்பனைக்காக அவர்கள் சுமார் இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் கேரளா கோட்டத்துறையை சேர்ந்த பாண்டியன் (எ) கருப்புசாமி(31) என்பதும், மற்றொருவர் அரவிந்த் (19) என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.