பொள்ளாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர்புதூர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த மரம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், வெயில் மழைக்கு ஒதுங்கும் மக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்து வந்தது. 

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலமரத்தை சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக வருவாய் துறையினருக்கு, அப்பகுதி கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த காஜா என்பவர் மரம் வெட்டுவதற்காக ஆட்களை வரவழைத்து அனுமதி இல்லாமல் வெட்டியது தெரியவந்தது.



இதனையடுத்து, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்த கோடாரி, ரம்பம், மற்றும் கருவிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், மேலும் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 



அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த கோட்டூர் காவல்துறையினர், மரம் வெட்டியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆலவிருட்சமாக இருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், பொதுமக்களுக்கு நிழல் தந்த, மரம் தற்போது கிளைகளை இழந்து காட்சியளிப்பது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...