கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மாணிக்கம் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வந்தார்.

கொரோனா காரணமாக கல்லூரிகள் இயங்காமல் விடுமுறை என்பதால் வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் மாணிக்கத்திடம் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், எனவே வீட்டுக்கு வந்து பெண் கேட்குமாறு கூறி உள்ளார். இதனையடுத்து, மாணிக்கம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர்களிடம் அவர்களின் பெண்னை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

இதனை அவர்கள் மறுத்து திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை எனக் கூறி உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்த மாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து தர மறுத்ததால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் மாணிக்கத்தின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...