நீலகிரி: உதகை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்காததால் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் மாவட்டத்தில் உள்ள உதகை நகராட்சி மிகவும் முக்கியம் வாய்ந்த நகராட்சியாகும். ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் உதகை நகரை சுத்தம் செய்து, தூய்மையாக வைத்துக்கொள்வதில் சிறந்த நகராட்சியாக உதகை நகராட்சி செயல்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக நகராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் செய்து வருகிறது.
நகராட்சி அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் என மொத்தம் 750 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும், அத்துடன் நிலுவைத் தொகை உட்பட அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.