கோவையில் செல்போன் மூலம் விதவை பெண்ணுக்கு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் அடித்ததில் உயிரிழப்பு!

கோவை: கோவையில் செல்போன் மூலம் விதவை பெண்ணுக்கு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் அடித்ததில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் செல்போன் மூலம் விதவை பெண்ணுக்கு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் அடித்ததில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அடுத்து மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. கணவர் இறந்த நிலையில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் தனலட்சுமியின் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஆபாசமாக பேசியதுடன் தொடர்ந்து அலைபேசி மூலம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து உள்ளார். மேலும், தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து தனலட்சுமி தனது உறவினர்களிடம் முறையிட்டு உள்ளார். இந்த நிலையில், அந்த நபர் நேற்று போன் செய்து தனலட்சுமியை பார்க்க வருவதாக கூறி உள்ளார். அவருக்கு பாடம் புகட்ட எண்னி இருந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்த தனலட்சுமி நைசாக பேசி வீட்டிற்கு வரவைத்து உள்ளார். 

இதனிடையே, வீட்டின் உள்ளே அந்த நபர் நுழைந்ததும் தயாராக இருந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். தனலட்சுமியின் உறவினர்கள் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த நபரை வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் வீசி உள்ளனர். ரயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் அடித்து கொல்லப்பட்டு தண்டாவாளத்தில் வீசப்பட்டது தெரிய வந்தது. உயிரிழந்த அந்த நபர் கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பதும் திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

அலைபேசி மூலம் ஆபாசமாக பேசி அழைப்பு விடுத்தவரை தாக்கியதால் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...