கோவை: போக்சோ சட்டப்பிரிவை முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக, கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசாருக்கு பயிற்சி முகாம், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா கலந்துகொண்டு போக்சோ சட்டப்பிரிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது, குழந்தைகள் குற்றப்பிரிவு எஸ்பி ஜெயஸ்ரீ கூறியதாவது:
போக்சோ வழக்குகள் அதிகரிப்பது, என்பது குற்றங்கள் அதிகரிப்பதாக அர்த்தமில்லை. அதன் மீதான விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதையே காட்டுகிறது. ஏதாவது, ஒரு சூழ்நிலையில் குழந்தைகளை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் விடும் போது, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து புரிதல் தற்போது பெற்றோரிடையே அதிகரித்து வருகிறது.
மேலும், இது குழந்தைகளுக்கான பாதிப்பு மற்றும் சமூக நீதிக்கான பாதிப்பாக இருந்தது. அதனை களைய போலீசார் நம்பிக்கை அளித்து வருகின்றனர். பாதிக்கப்படுவோருக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மாவட்ட எஸ்.பி அருளரசு, கோவை மாநகர தலைமையக துணை ஆணையர் குணசேகரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுந்தர், போலீசார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.