கோவை: கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளான குளங்களை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் பூங்காக்கள் அமைக்கும் பணி, சாலைகள் அமைக்கும் பணி, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள், விளையாட்டுத்திடல், தெருவிளக்குகள், சாலையோர நடைபாதைகள் ஆகிய பணிகள்
நடைபெற்று வருவதை குறித்தும், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாதிரி சாலை பணிகள் நடைபெற்று வருவதை குறித்தும், இத்திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணிக் குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் ஆகிய குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
பின்னர், கோவை மாநகரின் மையப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் புதுப்பொழிவு பெற்று வருவதை குறித்தும், இந்த மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பர பலகைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் நடைபெற்று வருவதைக் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகிப்பது குறித்தும், பாதாளசாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் முறைகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், முடிவடையாமல் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஸ்மார்ட்சிட்டி திட்டம் சரவணக்குமார், அனைத்து மண்டல பொறியாளர்கள், செயற்பொறியாளார்கள், உதவி பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள் மற்றும் தொடர்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனர்.