கோவை: கோவையில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் அரசு மருத்துவமனை, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் இரவு நேரங்களில் படுத்து உறங்குகின்றனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் கோவில்களில் அன்னதானம் என கிடைப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு காந்திபுரம் நஞ்சப்பா சாலை ஓரத்தில் படுத்திருந்த ஒருவரின் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு தாக்கி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் குடிபோதையில் வந்த 2 நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையில் கல்லை போட்டுவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், படுகாயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள காட்டூர் போலீசார் தலையில் கல்லைப்போட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக கருதப்படும் ஒரு நபரை பிடித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.