கோவை: கோவையில் வன விலங்குகளுக்கு பிடித்தமான தாவரங்களை வளர்க்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனச்சரகம் முக்கியமான இடமாகும். மாதத்திற்கு நூற்றுக்கணக்கான யானைகள் கடக்கும் பகுதியாக அவ்வழித்தடம் அமைந்துள்ளது.
பொதுவாக யானைகள் உணவு தேவைக்காகவும், நீர் தேவைக்காவும் மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வலசை செல்கிறது. ஒரு வேளை யானை அல்லது ஏனைய வனவிலங்குகள் பாதையை கடக்கும் போது மனித இடர்பாடுகள் இருப்பின் அங்கு மனித விலங்கு மோதல் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் செயற்பட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, கடந்த சில காலமாக வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் நோக்கில் வனத்துறை சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் ஜக்கானரி, கல்லாறு, உழிகல், சுண்டப்பட்டி, கண்டியூர், நெல்லலிமலை என 6 பீட்கள் உள்ளன. வனப்பகுதியில் ஓடும் பவானி ஆறு, கோத்தகிரி கல்லாறு ஆகிய நீர் பகுதிகளை வனவிலங்குகள் பயன்படுத்தி வருகின்றன.
மேலும், வறண்ட காலத்தில் வனப்பகுதிகளில் நீர்தேக்க தொட்டிகளும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பித்தவுடன் வேம்பு, அத்தி, புங்கை, காட்டு எலுமிச்சை, அரசமரம், வாகை என 20 வகையான மர நாற்றுக்களை 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளாக உருவாக்கி வனப்பகுதியில் நட உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.