நீட் தேர்வு முடிவில் ஓ.எம்.ஆர் சீட்டில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் புகார்..!

கோவை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர்.சீட்டில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர்.சீட்டில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில் NTA இணைய பக்கத்தில் இருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவர் மனோஜ் என்பவர் பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் மாணவர் மனோஜ் 12 ம் வகுப்பு முடித்தார். இவர் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு எழுதிய நிலையில், அக்டோபர் 11ம் தேதி ஒ.எம்.ஆர் சீட்டில் வெளியான முடிவுகளை பார்த்துள்ளார். அதில் 594 மதிப்பெண்கள் என காட்டியது.

பின்னர் கடந்த 15ம் தேதி மீண்டும் ஒரு முறை மாணவர் மனோஜ் ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்த போதும் 594 மதிப்பெண் காட்டியது. இந்நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் 248 மதிப்பெண் மட்டும் காட்டியதால் மாணவர் மனோஜ் அதிர்ச்சி அடைந்து ஓ.எம்.ஆர் சீட்டை ஆய்வு செய்த பழைய ஓ.எம்.ஆர் சீட்டின் முடிவுகளுக்கும், நேற்று வந்த முடிவுகளுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர், இது குறித்து புகார் அளிக்க NTA டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை எனவும், இதுவரை 5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.

மேலும், தற்போது உள்ள ஓ.எம்.ஆர் வேறு முடிவுகளை காட்டுவதாகவும், பழைய ஓ.எம்.ஆர்.வேறு முடிவுகளை காட்டுவதாகவும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....