கோவை தடாகம் பகுதியில் கட்டுக்கடங்காமல் நடக்கும் கனிமவள கொள்ளை..! மீண்டும் லாரிகள் மற்றும் ஜேசிபி பறிமுதல்..!

கோவை: கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனிம வள கொள்ளை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகளே செம்மண் கடத்தல் வாகனங்களை தடுத்து நிறுத்தி, வழக்கு பதிவு செய்துள்ள சம்பவமும் நடைபெற்று வருகிறது. இருந்த போதும், யாருடைய ஆணைக்கும் கட்டுப்படாமல், அங்குள்ள சில செங்கல் சூலைகள் செய்யும் அட்டூழியங்களுக்கு முடிவு இல்லையா..? என்று அச்சப்படுகின்றனர் அப்பகுதி பொது மக்கள்.

கோவை: கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனிம வள கொள்ளை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகளே செம்மண் கடத்தல் வாகனங்களை தடுத்து நிறுத்தி, வழக்கு பதிவு செய்துள்ள சம்பவமும் நடைபெற்று வருகிறது. இருந்த போதும், யாருடைய ஆணைக்கும் கட்டுப்படாமல், அங்குள்ள சில செங்கல் சூலைகள் செய்யும் அட்டூழியங்களுக்கு முடிவு இல்லையா..? என்று அச்சப்படுகின்றனர் அப்பகுதி பொது மக்கள்.



கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையாம்பாளையம், 24 வீரபாண்டி போன்ற ஊர்களில் அனுமதி இன்றி HACA நிலத்திலும், புறம்போக்கு இடங்களில் அனுமதி இன்றி செங்கல் சூலைகள் இயங்கி வருகின்றது.

கடந்த வாரம் தடாகம் சாலை வழியாக சட்டவிரோதமாக செம்மண் அள்ளி சென்ற 4 டிப்பர் லாரியையும், ஒரு JCB வாகனத்தையும் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் பின், மூன்று நாட்கள் கழித்து, சின்ன தாடகம் கிராமப்பகுதியில், மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் செம்மண் அள்ளுவதாக புகார் அளித்தார். 

அதன் பேரில் விசாரணை செய்ததில், நிலத்திற்கு உரிமையாளர் சம்மதம் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் கனிம வள கொள்ளையர்கள் செம்மண் எடுத்து இருப்பது தெரியவந்தது. பின்பு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிப்பர் லாரி, JCB வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் மற்றொரு தொடர்ச்சியாக, 17.10.2020 அன்று கோவை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சேர்ந்த உதவி புவியலாளர் பிரசாத், தனி வருவாய் அலுவலர் (கனிமம்),உதவி இயக்குநர் ஆகியோர் நஞ்சுண்டாபுரம் பிரிவு, தடாகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, அந்த பகுதியில் செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி (TN38CR8209) மடக்கி பிடித்தனர். மேற்படி, பரிசோதனை செய்ததில் செம்மண் கனிமத்தை எடுத்து வர புவியியல் மற்றும் சுரங்க துறை மூலம் வழங்கப்படும் அனுமதி சீட்டு இல்லாமல் வந்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து, ஓட்டுநர் பரந்தாமனிடம் விசாரணை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாததால் கனிமங்கள் மற்றும் சுரங்கள் மேம்படுத்தும் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1957 -ன் பிரிவின் படி 4(1),4(1-A) -ன் படி கனிமங்கள் எடுத்து செல்ல அரசிடம் உரிய அனுமதி சீட்டு வாங்க வேண்டும், அதை மீறும் பட்சத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கள் மேம்படுத்தும் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 21(1)படி குற்றமாகும். மேற்படி கனிம கடத்தலுக்கு உட்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து கூறும், சமூக செயற்பாட்டாளர்கள், கோவை, தடாகம் பகுதியில் நாளுக்கு நாள் கனிம வளக்கொள்ளை அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை சுரண்டி விற்றுவிடுவார்களோ என்று பயம் எழுகிறது. இந்த கனிம வள கொள்ளையர்களை உடனடியாக தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...