வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம்
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில், வால்பாறை காவல் நிலையம் முன் நடைபெற்ற பிரச்சாரத்தில், பொதுமக்கள் அனைவரும்
முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின்படி நடந்து கொள்வோம் என்று பொதுமக்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.