கோவை: மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆனைமலையாறு, நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டம் மற்றும் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருவதாக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் இன்று பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டு தொடங்க காரணமாக இருந்த வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு ரூ.1 கோடியில், ஆழியார் அணை பூங்காவில் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை கொண்டுவர காரணகர்த்தாவாக இருந்த, வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த வி.கே. பழனிச்சாமி கவுண்டர் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்படும், என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்காக, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பூங்காவில் இடம் தேர்வு செய்து மணிமண்டபம் கட்டுவதற்கான பணியை இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும், தொடர்ந்து பொள்ளாச்சியில் ரூபாய் 2.75 கோடி மதிப்பில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் - திருமண மண்டபம் கட்டுவதற்கான பணியையும் தொடங்கி வைத்து ரூபாய் 4.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை திருப்பூர் மாவட்டங்கள் உள்ளடங்கிய 4.5 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்த, கேரளா மற்றும் தமிழக அரசு குழுக்கள் அமைத்து உள்ளதாகவும், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், விரைவில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம், பாண்டியாறு புன்னம்புழா திட்டம், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் செயல்படுத்த, தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்த விழாவின் போது, தமிழக கால்நடைத்துறை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்