கோவை: கோவையில் நாய்க்கு விஷம் வைத்து தோட்டத்தில் இருந்து சந்தன மரத்தை வெட்டி திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியை சேர்ந்த குருநாதன்(50).
விவசாயம் செய்து வருகிறார். தனக்கு சொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர், மற்றொரு பகுதியை ஆட்டு பண்ணை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். இவரது தோட்டத்தில் 40 மற்றும் 15 வருடங்களான சந்தன மரங்கள் உள்ளன.
இந்நிலையில், இன்று அதிகாலை தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு சந்தன மரங்களை வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, வெட்டப்பட்ட சந்தன மரத்தின் மதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினரின் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்களுக்கு விஷம் வைத்து கொன்று சந்தன மரத்தை வெட்டி, திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.