கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, அன்சாரி வீதி 71 வயது மூதாட்டி, ஆர்.எஸ்.புரம் 70 வயது முதியவர், டி.கோட்டாம்பட்டி 29 வயது ஆண், சூளேஸ்வரன்பட்டி 28 வயது ஆண், 49 வயது ஆண், 9 வயது பெண், அம்பராம் பாளையத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி, 66 வயது முதியவர், சுந்தரம் லே அவுட் 57 வயது ஆண், கொங்கநாட்டான்புதூர் 44 வயது ஆண், புளியம்பட்டி 33 வயது ஆண் மற்றும் ஆனைமலையை சேர்ந்த ஒருவர் என மொத்தம், 12 பேருக்கு இன்று கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதோடு, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய நான்கு தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை, நான்கு தாலுகாக்கள் உட்பட்ட பகுதி 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தவும், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.