கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவையில் உக்கடம், ஆவாரம்பாளையம், திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இது போன்று நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் காரணமாக விவசாயிகள் பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்லும் போது பாதிக்கப்படுகின்றனர், என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில்:

கோவையில் மந்த நிலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக கால்நடை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் எடுத்து செல்லும் விவசாயிகள், அதனை சரியான நேரத்திற்கு எடுத்து செல்ல முடிவதில்லை. காய்கறி விவசாயிகள், கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள் போக்குவரத்து நெரிசலால் தினம் தினம் சிக்கி தவிக்கின்றனர். கால்நடை தீவனங்கள் கூட வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

சூலூர், சுல்தான் பேட்டை, காரமடை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகர் பகுதிகளுக்கு வியாபாரம் செய்ய வரும் விவசாயிகள், குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாததால் கீரை மற்றும் காய்கறி வாடி போய்விடுகின்றன. எனவே, அரசு முழு முயற்சி எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...