கோவை செட்டிபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

கோவை: கோவை செட்டிபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் வைரபிரகாசம்(40). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மதிவாணன் மற்றும் வைதபிராகசம் என்பவர் அதே நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சிவபிரகாசத்தை சந்திக்க வந்த அவரது நண்பரான நவக்கரை பகுதியை சேர்ந்த பிரதாப்(44) அங்கேயே தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வைரபிரகாசம் மற்றும் பிரதாப் இருவரும் பொள்ளாச்சி சாலை பகுதியில் உள்ள மதிவாணனின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்தி உள்ளனர்.

அப்போது, குடிபோதையில் பிரதாப்பிற்கும் மதிவாணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதில், பிரதாப் மதிவாணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து பிரதாப்பின் தலையில் ஓங்கி அடித்ததில் அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வைரபிரகாசம் பிரதாப்பை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். பலத்த காயம் அடைந்த பிரதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், இதுகுறித்து வைரபிரகாசம் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் மதிவாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...