தாராபுரத்தில் அரசு பள்ளி மைதான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பள்ளி மைதான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் அரசு பள்ளி மைதான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட குமாரபாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் தான் அமர்ந்து படிக்கவும் , மாலை நேரங்களில் விளையாடவும் முடிந்து வருகிறது. பள்ளி மைதானம் இல்லாத சூழ்நிலையில், பள்ளிக்கு வெளியில் உள்ள இடத்தை முத்துசாமி என்பவர் வருவாய் துறை அதிகாரிகளின் துணையுடன் பட்டா தயார் செய்த ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்படி தனிநபர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு தேவையான ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு இடமில்லாமல் போகும் என்பதால் இதனை தடுத்து நிறுத்தி பள்ளிக்கு சொந்தமான இடத்தை பள்ளிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...