நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மேலங்கள் முழங்க இசை அமைத்து மனு!

திருப்பூர்: திருப்பூரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேலங்கள் முழங்க இசை அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக மேலங்கள் முழங்க இசை அமைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட நாட்டுபுற இசை கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாத காலமாக எந்த சுப நிகழ்ச்சியும், கோவில் திருவிழாக்களும் நடைபெறாத நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மங்கள இசை வாசித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சுப நிகழ்ச்சிகளில் மங்கள இசை கலைஞர்களுக்கு தடை இல்லாமல் செய்திட வேண்டும், கோவில் திருவிழாக்களில் கரகாட்டம், நாட்டுப்புற நையாண்டி மேளம் உள்ளிட்டவைகளை அனுமதித்திட வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவித்தொகை கிடைத்திட வழி செய்ய வேண்டும், அரசு வழங்கும் விலை இல்லா இசைக்கருவிகளை மாவட்டத்திற்கு தலா 100 பேருக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...