பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: கடலூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி, கடலூரில் காவல் துறையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, அந்த மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால் தான் பணியிட மாற்றும் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.



இதைத் தொடர்ந்து, மூன்று காவலர்களை பணியிட மாற்றம் செய்த காவல்துறையை கண்டித்து, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், மாநில வெளியீட்டு கழக செயலாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக,, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவலர்களை இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளையும், தமிழக அரசையும், கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...