திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கொள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கொள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி அவர்களின் 152வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வெள்ளையனை வெளியேற்ற காந்தியே கொள்ளையனை வெளியேற்ற மாட்டாயா என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.