திருப்பூர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூரில் கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

அண்ணல் காந்தியடிகளின் 152வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள கதர் சிறப்பு விற்பனை மையத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த காந்தி அவர்களின் உருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், இந்த ஆண்டிற்கான கதர் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு 253 லட்சத்திற்கு கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கதர் சிறப்பு விற்பனை மையங்களிலும் கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் விற்பனை மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.