கோவை: கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவு என்பதால் சமூக இடைவெளியுடன் கிராம சபை கூட்டத்தை நடத்தி இருக்கலாம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை வைசியாள் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க தொண்டர்களை சந்திக்கும் துளசி யாத்திரையை துவங்கி வைத்து தொண்டர்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக அரசு கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து இருப்பது தேவையற்றது எனவும் கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறைவு என்ற நிலையில், சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்தி இருக்கலாம் என்று தெரிவித்தார்.
அதேபோல, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக கிராம சபைகளில் தீர்மானம் போட்டால், அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறிய அவர், கிராம சபை கூட்டம் நடத்தி இருந்தால் வேளாண் சட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும் எனவும் தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை என்று கூறினார்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் தேச தந்தை காந்திக்கு மலரஞ்சலி ரத்து செய்யப்பட்டது சபாநாயகரின் முடிவு எனவும் ஏற்கனவே துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பதால், மலரஞ்சலி நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் நாடு முழுவதும் பா.ஜ.கவினர் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்றார்.
கோவையில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் விதமாக எல்லா இடங்களிலும் பா.ஜ.க சார்பில் துளசி யாத்திரை நடத்தப்படுகின்றது எனவும் ஏற்கனவே போட்டியிட்ட இடங்களில் இந்த பணி நடந்து வருவதாகவும் தெரிவித்த அவர், மக்கள் பணியில் எப்போதும் இருந்து வருவதாகவும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் பிரிந்த போது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் ஒற்றுமையாக இருங்கள் என பிரதமர் மோடி கூறியதாகவும், பஞ்சாயத்து எதுவும் செய்யவில்லை எனவும் கூறிய அவர், இப்பொழுது இருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை எனவும் இதில் தலையிட வேண்டும் என்ற ஆர்வம் பா.ஜ.கவிற்கு இல்லை என தெரிவித்தார். ஒருவேளை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் வேறு ஒருவர் முன்னிலையில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்தால் அது அவர்களின் முடிவு எனவும் பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.