ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம்

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி உலாந்தி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. 



இங்கு ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில், வன விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய புலிகள் ஆணையம் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் மூலம் , புலிகள் கணக்கெடுப்பு (Phase - lV Monitoring) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான Phase - lV, Monitoring எனப்படும் தானியங்கி கேமரா கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அட்டகட்டி வனத்துறை பயிற்சி முகாமில், நேற்று வனத்துறை ஊழியர்களுக்கு, தானியங்கி கேமராக்கள் பொருத்தும் முறை மற்றும் கணக்கெடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

நாளை காலை முதல் தானியங்கி கேமராக்களை வனப்பகுதிக்குள், 2 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு கிரிட்லயன் (gridline) என 245 கிரிட்லயன்கள் பிரிக்கப்பட்டு, நான்கு வனசரகங்களில், சுமார் 600 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடக்க உள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் நடக்கும் இந்த கணக்கெடுப்பு பணியில், புலிகளின் நடமாட்டம், எண்ணிக்கை உள்ளிட்டவை புகைப்படங்கள் மூலம் துல்லியமாக கணக்கிடப்படும் என்று, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 



பயிற்சி முகாமில் ஆனைமலை புலிகள் காப்பக, பொள்ளாச்சி வனகோட்ட துணை இயக்குனர், ஆரோக்கியராஜ் சேவியர் கலந்துகொண்டு வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனச்சரகர்கள் உள்ளிட்ட வனத்துறை ஊழியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...