பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மண்ணூர் அருகேயுள்ள வெள்ளாளக்கவுண்டன்புதூரை சேர்ந்த கதிர்வேல், என்பவரது தோட்டத்தில், வளர்க்கப்பட்டு வந்த 4 வயதுள்ள பசு மாடு நேற்று, தோட்டத்தில் மேய்சலுக்கு சென்ற போது, அங்குள்ள 60 அடி கிணற்றில் தவறி விழுந்தது.

கிணற்றில் சுமார் 25 அடிக்கு தண்ணீர் இருந்ததால், காயமின்றி தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுவின் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையதிற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் புருசோத்தமன், தலைமையிலான குழுவினர், கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர். மேலும், திறந்த வெளியில் இருக்கும் கிணற்றை சுற்றி கம்பி வேலி அமைக்க தோட்டத்து உரிமையாளருக்கு தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.