பொள்ளாச்சியில் வீடு வீடாக உடல் வெப்பநிலை மற்றும் காய்ச்சல் அறிகுறி பரிசோதனை மேற்கொள்ள, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் உத்தரவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தும் நடவடிக்கையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தடுப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தும் நடவடிக்கையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, நகராட்சியில் நடக்கும் சுகாதார பணிகளை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் (சென்னை) வடிவேலன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் அவர் கூறுகையில், பொள்ளாச்சியில் கொரோனா தொற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆரம்ப நிலையில் தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும், தெருத்தெருவாக, வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை, மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள வார்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தவும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை முகாமில் பரிசோதனை செய்ய செய்யவும், அவ்வாறு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்ததும், காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காய்ச்சல் முகாமுடன், கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் விநியோகம் செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...