திருப்பூர்: தாராபுரத்தை சேர்ந்த தம்பதி, திருப்பூர் அருகே இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி - தங்கமுத்து மற்றும் ராதாமணி. நேற்று இரவு, குடும்ப பிரச்சினை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறி, பின்னர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர். பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.
பின்னர், கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும், பின்னர் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த இரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த இரும்பு பாதை போலீசார் இரண்டு உடல்களையும், கைபற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.