கோவையில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் மற்றும் சிறுவன் கைது; கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் சேர்ப்பு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்த நிலையில், வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் வந்த நிலையில், வாகன திருட்டில் ஈடுபட்ட ஒரு வாலிபர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தொடர் திருட்டால், தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுவன் மற்றும் வாலிபர் ஒருவர், அரசு மருத்துவமனையில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றை தள்ளிக் கொண்டு சென்றதை பார்த்துள்ளனர்.

அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை விசாரிக்க அழைத்த போது, இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஒருவரின் பெயர் குகன் (22) பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இவர், எல்.ஐ.சி பகுதியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த இரு சக்கர வாகனத் திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மற்றொருவரான சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரிடம் இருந்தும் திருடப்பட்ட இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...