நீலகிரி: உதகையில் உள்ள கடைகள் மற்றும் வங்கிகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கனரா வங்கிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
நீலகிரி: உதகையில் கடைகள் மற்றும் வங்கிகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கனரா வங்கிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நான்காயிரத்தை கடந்துள்ள நிலையில், மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இ.பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள், மார்க்கெட், கமர்சியல் சாலை, மதுபான கடை, அரசு வங்கி போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, உதகை மத்திய நகர பகுதியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கி கொண்டு வரும் கனரா வங்கியில் பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, வங்கி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை எச்சரித்த நகராட்சி அதிகாரிகள், கனரா வங்கிக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும் கடை வீதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.500 வீதம் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற ஆய்வில் அபராத கட்டணமாக மொத்தம் பத்தாயிரம் ரூபாய் அதிகாரிகள் வசூலித்தனர்.