கோவை தெற்கு மண்டலத்தில்‌ ரூ.4.15 கோடி மதிப்பீட்டில்‌ வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ ரூ.4 கோடியே 15 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெறும்‌ வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ இன்று துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில்‌ ரூ.4 கோடியே 15 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெறும்‌ வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ இன்று துவக்கி வைத்தார்.

பின்னர், பாலக்காடு மெயின்‌ ரோடு சுகுணாபுரக்தில்‌ புதிதாக அமைக்கப்பட்ட இ-சேவை மையத்தினை பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



அதேபோல, கோவை மாகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.78-க்குட்பட்ட தேவேந்திர வீதி, நாடார்‌ வீதி, பிள்ளை வீதி, போயர்‌ வீதி ஆகிய பகுதிகளில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.29 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌, வடக்கு ஹவுசிங்‌ பூனிட்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ உடற்பயிற்சி கூடம்‌ அமைக்கும்‌ பணிக்கும்‌ பூமி பூஜையினை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.



பின்னா்‌, வார்டு எண்‌.77க்குட்பட்ட ரங்கசாமி காலனி மற்றும்‌ ராஜரத்தினம்‌ நகர்‌ பகுதியில்‌ சி.எப்‌.சி திட்டத்தின்கீழ்‌ ரூ.52 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, ராமமூர்த்தி லிங்க்‌ ரோடு (மாசாணியம்மன்‌ கோவில்‌ ராடு) பகுதியில்‌ ரூ.40 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, அப்பாவு பண்ணாடி வீதி மற்றும்‌ பிரைட்‌ கார்டன்‌ பகுதியில்‌ ரூ.37 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, கருப்பண்ணன்‌ பாதை பகுதியில்‌ ரூ.37 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, அன்னை இந்திரா நகர்‌ பகுதியில்‌ ரூ.60 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, பாலாஜி நகர்‌ மற்றும்‌ சண்முகா நகர்‌ பகுதியில்‌ ரூ.28 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌.78 வடக்கு ஹவுசிங்‌ பூனிட்‌ பகுதியில்‌ ரூ.32 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, வார்டு எண்‌.79 லாலி ரோடு, ராஜாத்தியம்மாள்‌ லே-அவுட்‌, முனியப்பன்‌ கோவில்‌ வீதி, மாரியம்மன்‌ கோவில்‌ வீதி ஆகிய பகுதியில்‌ ரூ.75 இலட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ தார்சாலைகள்‌ புதுப்பிக்கும்‌ பணிகளுக்கான பூமி பூஜையினையும்‌, ஆகமொத்தம்‌ ரூ.4 கோடியே 15 இலட்சம்‌ மதிப்பீட்டிலான வளர்ச்சிப்‌ பணிகளுக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ துவக்கி வைத்தார்.

பின்னா்‌ பூமி பூஜை செய்த அனைத்து இடங்களிலும்‌ பொதுமக்களுக்கு கொரோனா நோய்‌ எதிர்ப்பு சத்து மாத்திரைகள்‌ அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர்‌

எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌ மற்றும்‌ உதவிப்‌ பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ மற்றும்‌ மண்டல சுகாதார அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...