கோவை: கோவை பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில், பேரிடரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பது குறித்து, தீயணைப்புத்துறையினர் செய்த செயல் விளக்கங்கள் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், அதிலிருந்து மீட்பது குறித்தும் பொள்ளாச்சியில் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் இன்று புதிய பேருந்து நிலையத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை பெய்யும் பொழுது ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் சிக்கி உள்ளவர்களை கயிற்றைக் கட்டி எப்படி காப்பாற்றுவது, அதேபோல் மாடிகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, ஆறுகளில் கயிறு கட்டி எப்படி செல்வது, ஆற்றுத் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை எப்படி காப்பாற்றுவது போன்றவை தீயணைப்புத் துறையினரால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது

மேலும், சாலைகளில் விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவர்களை விரைந்து காப்பாற்றுவது குறித்தும் தத்ரூபமாக செய்து காட்டினர். பேரிடர் காலத்தில் இயற்கை சீற்றங்களில் சிக்கி கொள்பவர்களைக் காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினர் செய்து காட்டிய நிகழ்வு அங்கிருந்தவர்களை இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.