பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 12 டன் உரம் மற்றும் லாரி பறிமுதல் - குடோனுக்கு சீல் வைப்பு!

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மூட்டைகளில் 12 டன் உரம் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் குடோனுக்கு சீல் வைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 270 மூட்டைகளில் 12 டன் உரம் பறிமுதல் செய்த வருவாய் துறையினர் குடோனுக்கு சீல் வைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும் உர மூட்டைகளை பதுக்கி வைத்து, லாரி மூலமாக கடத்துவதாக சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, அங்கு விரைந்த சார்-ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததும், லாரியில் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.



இதையடுத்து, அங்கிருந்த 270 மூட்டைகளில் இருந்த 12 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் வேளாண் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், லாரி ஓட்டுநர் கருப்பசாமியிடம் விசாரித்த போது, சோமனூர் பகுதியிலிருந்து உர மூட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு வந்து, கேரளாவிற்கு கடத்த முற்பட்டதும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உர மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, கேரளாவிற்கு கடத்தி சென்று பல மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, உர மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், குடோன் உரிமையாளர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...