இஎஸ்‌ஐ தொழிலாளர்கள்‌ பிள்ளைகளின்‌ 20 சதவீத மருத்துவ இடங்களை பறிப்பதா..! பி.ஆர்.நடராஜன்‌ எம்பி கண்டனம்!

கோவை: இஎஸ்‌ஐ மருத்துவமனையில்‌ தொழிலாளர்களின்‌ பிள்ளைகளின்‌ மருத்துவ கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 சதவீத இடங்கள்‌ பறிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர்‌ பி ஆர்‌ நடராஜன்‌ தெரிவித்துள்ளார்‌.


கோவை: இஎஸ்‌ஐ மருத்துவமனையில்‌ தொழிலாளர்களின்‌ பிள்ளைகளின்‌ மருத்துவ கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 சதவீத இடங்கள்‌ பறிக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்தற்குரியது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர்‌ பி ஆர்‌ நடராஜன்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்‌ கூறியிருப்பதாவது,

தொழில்‌ நகரமான கோவை, சிங்காநல்லூரில்‌ 32 ஏக்கர்‌ நிலத்தில்‌ ரூ.520 கோடி மதிப்புள்ள இஎஸ்ஐ மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. இஎஸ்‌ஐ மருத்துவரனைகள்‌ 1948 தொழிலாளர்‌ காப்பீட்டு சட்டத்தின்‌ கீழ்‌ தொழிலாளர்களின்‌ சமூக பாதுகாப்பை உறுதி செய்யும்‌ விதத்தில்‌ தொழிலாளிகளிடம்‌ இருந்து பெறப்படும்‌ பணத்தை வைத்தே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில்‌, தொழிலாளர்களின்‌ குழந்தைகள்‌ மருத்துவம்‌ படிக்க வேண்டும்‌ என்பதற்காக, காப்பீட்டு நபர்‌ அடிப்படையில்‌ அவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில்‌ 'இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி, மொத்தம்‌ உள்ள 100 மருத்துவ இடங்களில்‌ 65 இடங்களை மாநில அரசு மூலமும்‌, 5 இடங்களை மத்திய அரசு மூலமும்‌ நிரப்பப்படும்‌ மீதமுள்ள 20 இடங்கள்‌ இஎஸ்‌ஐ மருத்துவமனையின்‌ மூலமாக காப்பிட்டு நபர்களின்‌ குழந்தைகளிடம்‌ இருந்து விண்ணப்பங்கள்‌ பெற்று மதிப்பெண்‌ அடிப்படையில்‌ நிரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌, நீட்‌ தேர்வை கொண்டு வந்து எவ்வாறு ஏழை குழந்தைகளின்‌ மருத்துவ கனவை மோடி அரசு சிதைத்ததோ, அதேபோல்‌ இஎஸ்ஐ மூலமாக நிரப்பப்‌பட்டு வந்த காப்பீட்டு நபர்‌ இட ஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு முதல்‌ (2020 - 21) பறித்துள்ளது.

மத்திய பொது சுகாதாரத்துறை இயக்குநர்‌ அலுவலகம்‌ மூலமாக இனிமேல்‌ நிரப்பப்படும்‌ எனத்‌ தெரிவித்து, இதையும்‌ கபளிகரம்‌ செய்துள்ளது. இதன்மூலம்‌ நாடு முழுவதும்‌ சுமார்‌ 35 இஎஸ்ஐ மருத்துவமனைகளின்‌ 300க்கும்‌ மேற்பட்ட மருத்துவ இடங்கள்‌ பறிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின்‌ இந்த வஞ்சக நடவடிக்கையின்‌ மூலம்‌ மாதம்‌ 20 ஆயிரத்துக்கும்‌ குறைவான ' சம்பளம்‌ பெற்று இஎஸ்‌ஐ மருத்துவமனைக்கு தங்களால்‌ ஆன பங்களிப்பை கொடுத்து, தங்களது உழைப்பின்‌ மூலம்‌ உருவாக்கிய தொழிலாளர்கள்‌, இனிமேல்‌ அவர்களின்‌ குழந்தைகள்‌ மருத்துவம்‌ படிக்க முடியாத சூழலை, இந்த ஒரே அறிவிப்பின்‌ மூலம்‌ மோடி அரசு சிதைத்துள்ளது இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசு இந்த நடைமுறையை திரும்ப பெற வேண்டும்‌, பழைய நடைமுறையை உத்தரவாத படுத்த வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌. தொழிலாளர்களின்‌ பிள்ளைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களை கொண்டே நிரப்ப மாநில அரசு வலியுறுத்த வேண்டும்‌.

இதேபோல, தொழிளாலர்களின்‌ பிள்ளைகளின்‌ மருத்துவ கல்வியை பறிக்கும்‌ இந்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசை நிர்ப்பந்திக்கும்‌ வகையில்‌ தொழிற்சங்கங்கள்‌, கல்வியாளர்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌ தலையீடு செய்ய வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...