கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில், தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 580 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 580 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடத்தப்படும் என தெரிகிறது. ஒரே நாளில் வேளாண்மைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பேசுகையில், பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர் எனவும் மீதமுள்ள ஊழியர்களுக்கான சோதனைகளை அதிகரிக்க பல்கலைக்கழகம் சார்பாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல, வேளாண் பல்கலையில் சோதனைகளை மேற்கொள்ளும் பி.என்.புதூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு 150 பி.சி.ஆர் சோதனை கருவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், மற்ற ஊழியர்களுக்கான சோதனைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.
மேலும், ஒவ்வொரு புதன்கிழமையும், சித்தா ஆலோசனை அனைத்து ஊழியர்களுக்கும் உள்ளக மருந்தகத்தில் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நோயெதிர்ப்பு மற்றும் சீரான ஆரோக்கியமான உணவு குறித்த ஆலோசனைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் நாவலை எதிர்த்துப் போராடுவதில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கப்படும் என்று ரவிசந்திரன் தெரிவித்தார்.