டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள கூடாது - கோவை ஆட்சியரிடம் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் மனு!

கோவை: டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மேல், நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மேல், நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கடந்த 26ம் தேதியன்று கடை எண் 1716 மற்றும் 1597 ஆகிய மதுபான கடைகளை ஒட்டியுள்ள மது கூடங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், பணி முடிந்து வெளிவந்த ஊழியர்களை எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் குற்றவாளிகளை போல் நடத்தியதாகவும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது மிரட்டி பெறப்பட்ட கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என வலியுறுத்தி இருந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 17 ஆண்டுகளாக பணி நிரந்தரம் இன்றி கொரோனா பெருந்தொற்று உள்ள நிலையில், உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருவதாகவும், ஐந்து நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற அரசின் அறிவிப்பு மதுக்கூடங்களில் உதாசீனம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

அதேபோல, டாஸ்மாக் கடைககளை ஒட்டி இருக்கும் மதுக்கூடங்கள் சுய லாபத்திற்காக விதிமுறைகளை மீறி செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்த நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பாதுகாப்பற்ற சூழலில் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஊழியர்களை மிரட்டி காவல்துறையினர் கடிதம் பெற்றதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் நியாயமானதல்ல எனவும் தெரிவித்தனர்.



மேலும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவர்கள், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...