கோவை: பாபரி மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நீதியின் படுகொலை என இதழ் வெல்பேர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாபரி மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நீதியின் படுகொலை என இதழ் வெல்பேர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகமே சாட்சியாக இருந்த பாபரி பள்ளி இடிப்பின் நிகழ்வை சாட்சிகள் இல்லை என்று சொல்வதன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.
நூற்றாண்டுகள் இஸ்லாமியர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வந்த ஆலயத்தை பகல் வெளிச்சத்தில் இந்துத்துவ கும்பல்களால் இடித்து தள்ளப்பட்டத்தை உலகமே பார்த்தது, அத்தனை ஊடகங்களும் ஒளிபரப்பியது.
பாபரி பள்ளியை திட்டமிட்டுதான் இடித்தார்கள். இதற்கு அன்றைக்கு உபி முதல்வராக இருந்த கல்யாண்சிங் எல்லாவித ஒத்துழைப்புகளையும் வழங்கினார். இடிக்கும் வேளையில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் அதிகார வர்க்கம் திட்டமிட்டு செயல்பட்டது என மேற்படி வழக்கை விசாரித்த லிபரான் ஆணையம் மிகத்தெளிவாக கூறியது. மேலும், பாபரி பள்ளி இடிப்பு என்பது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறியது.
அங்கு குவிந்திருந்த காவல்துறையும் இராணுவமும் சட்டவிரோதமாக நடைபெற்ற இடிப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட குற்றவாளிகளும் அங்கு வேடிக்கை பார்த்தனர். இடித்த பின்னர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பாபரி பள்ளி விவகாரம் வழியாகத்தான் அக்குற்றவாளிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றனர்.
சிபிஐ அல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் பாபரி பள்ளி இடிப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவற்றை நீதிபதி கண்டு கொள்ளவேயில்லை. நாக்பூரில் இருந்து எழுதித்தரப்பட்ட தீர்ப்பையே அவர் வாசித்துள்ளார் என உலகமே காரி உமிழ்கிறது.
பாபரி பள்ளி இடிப்பு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பாபரி பள்ளி மீது நடத்தப்பட்ட நீதித்துறையின் கரசேவையாகும். பேய்களும் ஆளும் தேசத்தில் பிசாசுகள்தான் வேதம் ஓதும். பாசிஸ்டுகளின் கொட்டம் ஒருநாள் அடங்கும். உண்மை அன்று வெளிவரும்.
பாபரி பள்ளி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பை கண்டித்து, நாடு முழுவதும் வெல்ஃபேர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நீதிமன்ற முற்றுகை போராட்டங்களையும் நடத்துகிறது.

இந்த நிலையில், கோவையில் கரும்புக்கடை டோல் கேட் முன்பாக காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் H முஜீப் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் K S அப்துல் ரஹ்மான் கண்டன உரையாற்றினார். மாநிலச் செயலாளர் கோவை இப்ராஹிம், மாவட்ட துணை தலைவர் SM ஷாஜஹான், மாநகர தலைவர் R பீர் முஹம்மது, செயலாளர் சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநகர தலைவர் R பீர் முஹம்மது நன்றி கூறினார்.