கோவை: கோவையில் மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வைசியாள் வீதி கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி தனலட்சுமி (62). இவருக்கு ஜெயந்தி என்ற மகளும்,
பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மணிகண்டன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்து வந்தார். இதனிடையே, மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்றதால் நேற்று இரவு தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தனலட்சுமியை கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, 30 பவுன் நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பின்னர், பணி முடிந்து வீடு திரும்பிய மணிகண்டன் வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கழுத்தில் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இவரது அழுகுரலை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கழுத்தில் உள்ள கத்தியின்பிடி, கதவு, அலமாரியின் கதவு போன்ற இடங்களில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்யப்பட்டது.
மேலும் தனலட்சுமி வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றும் குடியிருபிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தனலட்சுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, தனலட்சுமிக்கு ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை, பணம் திருடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.