திருப்பூர்: இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் (94), உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி இராமகோபாலன் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மக்களின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என புகழாரம் சூட்டினார்.
மேலும், ராமகோபாலன் அவர்களின் கொள்கைகளை கடைபிடித்து, இந்து முன்னணி நடக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தமிழகம் முழுவதும், இந்து முன்னணி சார்பில் அமைதியான முறையில், கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு அஞ்சலி செலுத்தப்படும், என தெரிவித்தார்.