பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை உயிருடன் மீட்ட பல்லடம் தீயணைப்பு துறையினர்
திருப்பூர்: பல்லடம் அருகே 130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த வட மாநில வாலிபரை உயிருடன் மீட்ட பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், சாமி கவுண்டம்பாளையத்தில் பாழடைந்த கிணற்றில் ஒருவர் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்த்த, அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்குதகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்தை அடுத்து, சம்பவ இடம் சென்ற தீயணைப்பு துறையினர், 130 அடி ஆழம் உடைய கிணற்றில், 30 அடி தண்ணீர் மட்டுமே இருந்த நிலையில்,கிணற்றில் ஒரிசாவை சேர்ந்த வடமாநில இளைஞர் மோட்டோ என்று வாலிபர் போராடி கொண்டிருப்பதை பார்த்தனர். மேலும், அதே தண்ணீரில் ஆறடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றும் இருந்துள்ளது.
அந்த பாம்பிற்கு பயந்து, மோட்டோ அந்த கிணற்றின் மோட்டார் வைத்திருந்த தளத்தில் அமர்திருந்தார். கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில்இருந்த அவரை, உடனடியாக தீயணைப்பு வீரர், பலவேசமுத்து இறங்கி கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே துறை பணியாளர்களின் உதவி கொண்டு பாதுகாப்பாக அவரை மீட்டார்.

மீட்கப்பட்ட வாலிபருக்கு உடனடியாக முதலுதவி அளித்து பல்லடம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.