திருப்பூர்: திருப்பூரில் அடமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடியாட்களுடன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர்: திருப்பூரில் அடமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடியாட்களுடன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் பின்னலாடை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்காக கடந்த 2015ம் வருடம் முத்துசாமி என்பவரிடம் தனக்கு சொந்தமான 760 சதுர அடி நிலத்தை அடமானம் வைத்து மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
இதனிடையே, கடன் பெற்றது முதல் தவணைத் தொகை முறையாக செலுத்தி வந்த நிலையில், கடந்த ஊரடங்கு காலத்தில் மூன்று மாதமாக தவணைத் தொகை செலுத்தாத காரணத்தால் தற்போது அடியாட்களுடன் வந்து இடத்தை வேறு ஒருவருக்கு விற்பதாக கூறி தங்களை வெளியேறுமாறு வற்புறுத்தி வருகிறார்.
இது குறித்து ஏற்கனவே பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட லட்சுமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.