கோவையில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகள்‌ மற்றும்‌ கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகள்‌ மற்றும்‌ கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில்‌ தனிமைப்படுத்தபட்ட பகுதிகள்‌ மற்றும்‌ கொரோனா கட்டுப்பாட்டு அறைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன்‌ தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இன்று நீலிக்கோணாம்பாளையம்‌ ஆர்‌.கே.கே. நகர்‌ பகுதியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்‌ எனவும்‌, தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ தனிமைப்படுத்தப்பட்ட காலம்‌ முடியும்‌ வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்‌ எனவும்‌, அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசங்கள்‌ அணியவும்‌, சமூக இடைவெளியை பின்பற்றிடவும்‌, தங்களது வீடுகளை காலை மற்றும்‌ மாலை வேளைகளில்‌ கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும்‌ என்றார்.



மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால்‌ மற்றும்‌ மளிகை பொருட்கள்‌ கிடைப்பதற்கு தேவையான வசதிகளை செய்திடவேண்டுமென தொடா்புடைய அலுவலா்களிடம்‌ தெரிவித்த ஆணையாளர்‌ அவர்கள்‌, அப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ காய்ச்சல்‌, சளி, இருமல்‌ பரிசோதனை செய்ய வீடு வீடாக சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ வருகின்றனரா என

கேட்டறிந்தார்.



பின்னா்‌, அனைவரும்‌ இப்பகுதியில்‌ நடைபெறும்‌ சிறப்பு மருத்துவ முகாமில்‌ பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவித்த பின்னர்‌ குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா என கேட்டறிந்த அவர், அப்பகுதியில்‌ கழிவுநீர் செல்லும்‌ சாக்கடை கால்வாய்களை பார்வையிட்டு கொசுக்கள்‌ உற்பத்தியாகாமல்‌ இருக்க சாக்கடை கால்வாய்களில்‌ கொசு மருந்துகள்‌ தெளிக்கப்பட வேண்டும்‌ என சுகாதார அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



அதேபோல கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்தில்‌ உள்ள அம்மா உணவகத்தில்‌ தயார்‌ செய்யப்படும்‌ உணவுகள்‌ சுகாதாரமான முறையில்‌ தயார்‌ செய்யப்படுகிறதா என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனைத்‌ தொடர்ந்து, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகத்தில்‌ உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு செய்த ஆணையாளர்‌ அவர்கள்‌ அங்கு வரும்‌ பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யும்‌ கருவி மூலம்‌ வெப்பநிலை கண்டறியப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், தூய்மைப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ நபர்களின்‌ விபரங்கள்‌, இம்மண்டலத்தில்‌ முகாம்‌ நடைபெறும்‌ இடங்கள்‌ மற்றும்‌ கொரோனா பரிசோதனை செய்யப்படும்‌ விபரங்கள்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ மற்றும்‌ மூச்சுத்திணறல்‌ போன்ற பாதிக்கப்பட்டவர்களின்‌ விபரங்கள்‌, தொற்று பாதித்தவர்களின்‌ விபரங்கள்‌, தனிமைப்படுத்தப்பட்டவர்கள்‌ விபரங்கள்‌ ஆகியவை கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என கிழக்கு மண்டல கொரோனா கட்டுப்பாட்டு அறையில்‌ மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ எம்‌.முருகன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌ மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...