கோவை: கோவையில் காய்ச்சல் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தேதியன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
மேற்படி கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதேபோல, கிராம சபைக் கூட்டமானது திறந்தவெளியிலும் மற்றும் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதியிலும் நடத்தப்பட உள்ளது.
ஆகவே, இந்த கிராமசபைக் கூட்டத்தில் கொரானா தொற்று தொடர்பான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகள், கொரனா காய்ச்சல் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் ஆகியோர் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைபிடித்து தங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம
சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.